தாமதமாக வந்ததால் பையுடன் 100 தோப்புக்கரணம்… மாணவி பலி!
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வசாயில் உள்ள ஒரு பள்ளியில், தாமதமாக வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 14 வயது மாணவி காஜலுக்கு ஆசிரியர் 100 தோப்புக்கரணம் தண்டனையாக அளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தகப் பையுடன் இந்த கடுமையான தண்டனை அளிக்கப்பட்டதால், வீடு திரும்பிய காஜல் கடும் முதுகுவலி மற்றும் சுவாசக்கோளாறால் அவதிப்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
உடல்நிலை மோசமடைந்த மாணவி முதலில் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மும்பை ஜே.ஜே. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் காஜல் உயிரிழந்தார். காஜலுக்கு ஆஸ்துமா இருந்ததும், பையின் அதிக எடையுடன் தோப்புக்கரணம் போட்டதால் உட்புற இரத்தப்போக்கு ஏற்பட்டதுதான் மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.
A disturbing case from Maharashtra is drawing international concern.
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) November 16, 2025
A 12-year-old student in Vasai has died days after she was allegedly forced to do 100 sit-ups as punishment for arriving late to school — raising serious questions about student safety and disciplinary… pic.twitter.com/lY4mUG21ut
இந்த சோகமான சம்பவத்தை அடுத்து சர் ஜே.ஜே. மார்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் வாலிவ் போலீசுக்கு மாற்றப்பட்டது. இரண்டு–மூன்று நிமிடங்கள் தாமதமாக சென்றதற்காக இத்தகைய கடுமையான தண்டனை அளித்ததைத் தாய் ஷீலா கவுட் கேள்வி எழுப்பி, தனது மகளுக்கான நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
