டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வடிவங்களிலும் 100 விக்கெட்... பும்ரா அசத்தல் சாதனை!

 
பும்ரா
 

இந்தியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவங்களிலும் தலா 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். இந்த அபூர்வ சாதனை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. பும்ராவின் தொடர்ச்சியான பந்து வீச்சு திறமைக்கு இது மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அவரது விக்கெட் எண்ணிக்கை 100-ஐ எட்டியது.

தற்போது பும்ரா டெஸ்ட் போட்டிகளில் 234, ஒருநாள் போட்டிகளில் 139, டி20 போட்டிகளில் 101 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்திய வீரர்களில் டி20 வடிவில் ஏற்கெனவே அர்ஷ்தீப் சிங் 100 விக்கெட்டுகளை கடந்துள்ள நிலையில், அந்த பட்டியலில் பும்ரா இரண்டாவது வீரராக உள்ளார். ஆனால் மூன்று வடிவங்களிலும் 100 விக்கெட் என்ற சாதனையை பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமை பும்ராவுக்கே.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!