45 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த 1000 கோடி கடன்பத்திரங்கள்... முதலீட்டாளர்கள் அமோக வரவேற்பு!

 
அதானி

அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் ரூ.1,000 கோடி மதிப்பிலான மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட்டது. வெளியான 45 நிமிடங்களுக்குள்ளேயே முழுமையாக சப்ஸ்கிரைப் ஆனது. ரூ.500 கோடி அடிப்படை பகுதி வெறும் 10 நிமிடங்களில் நிரம்பியது. இதனால் முதலீட்டாளர்களின் அமோக வரவேற்பு தெளிவாக வெளிப்பட்டது.

இந்த கடன் பத்திரங்கள் ஆண்டுக்கு 8.90 சதவீத வட்டியை வழங்குகின்றன. மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் இவை பட்டியலிடப்பட உள்ளன. ICRA, CARE நிறுவனங்கள் AA- என்ற மதிப்பீட்டை வழங்கியுள்ளன. திரட்டப்படும் நிதியில் 75 சதவீதம் கடன் திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய முறையிலும் அதானி கடன் பத்திரங்கள் குறுகிய நேரத்தில் நிரம்பியிருந்தன. கடந்த சில மாதங்களில் விமான நிலையம், AI டேட்டா சென்டர், சாலைத் திட்டங்கள் என பல முக்கிய திட்டங்களை நிறுவனம் நேரத்துக்குள் நிறைவேற்றி வருகிறது. இதுவே அதானி எண்டர்பிரைசஸ் மீதான முதலீட்டாளர் நம்பிக்கைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!