அடி தூள்.. செம மாஸ்... 10,000 பேருக்கு 2,500 கிலோ கறியுடன் சமபந்தி விருந்து! கருப்பணார் கோவிலில் நள்ளிரவு பூஜை!

 
கள்ளவழி கருப்பணார் கோயில்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி ஒட்டியுள்ள போதமலை மலை அடிவாரத்தில் கள்ளவழி கருப்பணார் கோவில் உள்ளது. அப்பகுதியில் மிகவும் பிரசித்திபெற்று விளங்கும் இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் தை மாத கடைசி வாரத்தில் முப்பூஜை திருவிழா நடைபெறுவது வழக்கம். 

அந்த வகையில் இந்தாண்டு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி மலைமேல் இருக்கும் கள்ளவழி கருப்பணார் சுவாமி பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற பக்தர்கள் ஆடு, பன்றி, சேவல்களை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். 

கள்ளவழி கருப்பணார் கோயில்

முதலாவதாக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு, கோவில் பரம்பரை பூசாரிகள் தீர்த்தம் கொடுத்தனர். அதன்பிறகு, பக்தர்கள் அந்தத் தீர்த்தத்தை தெளித்து தாங்கள் கொண்டுவந்த ஆடு, பன்றிகள், சேவல்களை பலியிட்டனர். கடந்த ஆண்டு தாங்கள் வேண்டிய நல்ல காரியங்கள் நிறைவேறியதால் பக்தர்கள் ஆடு, பன்றி, கோழி, சேவல்களை பலியிட காணிக்கையாக கொடுத்தனர். 

தொடர்ந்து பசிறுமலை அடிவாரத்தில் உள்ள வயலில் சமாபந்தி விருந்துக்கான சமையல் நடந்தது. பக்தர்கள் பலியிட்ட சுமார் 1500 கிலோ ஆடு இறைச்சி, 1000 கிலோ சேவல் கறி பன்றி இறைச்சி, பச்சரிசி கொண்டு சாதம் வடித்து பக்தர்களுக்கு சுடச்சுட கறிவிருந்து வழங்கப்பட்டது. 

கள்ளவழி கருப்பணார் கோயில்

நாமக்கல், ராசிபுரம் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு நேர்த்திகடன் செலுத்தியதோடு கறிவிருந்து சாப்பிட்டு சென்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web