குடியரசு தினம் கோலாகலம்.... 10000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு!

 
குடியரசு

நாட்டின் 77-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. டெல்லி கடமை பாதையில் நடைபெறும் விழா ஒற்றுமை, சமத்துவம், கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமையும். வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டு கொண்டாட்டமும் இதில் இடம்பெறுகிறது. ராணுவ வலிமையும் இந்தியாவின் பன்முக கலாசார வளமும் விழாவில் வெளிப்பட உள்ளது.

குடியரசு

இதையொட்டி 19-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை உள்ளிட்ட மத்திய ஆயுதப்படைகள் நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. தேச வளர்ச்சியில் பங்களித்தவர்களை கவுரவிக்கும் வகையில் 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருவாய், வேலைவாய்ப்பு உருவாக்கம், புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சாதித்தவர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

குடியரசு தினம்

விழாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பாதுகாப்பு சாதனங்களும் விரிவாக பயன்படுத்தப்படும். ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். விமான சாகசங்கள், 2,500 கலைஞர்கள் பங்கேற்கும் கலாசார நிகழ்ச்சிகள், முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் விழாவை மேலும் கண்கவர் ஒன்றாக மாற்ற உள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!