அமெரிக்காவில் 1 லட்சம் விசாக்கள் ரத்து ... ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை!
அமெரிக்காவில் சட்டவிரோதம் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அமெரிக்க அரசு திடீரென ரத்து செய்துள்ளது. இதில் 8 ஆயிரம் மாணவர் விசாக்களும், போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட 2,500 தனிநபர் விசாக்களும் அடங்கும். விசா ரத்து செய்யப்பட்டவர்கள் விரைவில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
🚨BREAKING: The State Department has now revoked over 100,000 visas, including some 8,000 student visas and 2,500 specialized visas for individuals who had encounters with U.S. law enforcement for criminal activity.
— Department of State (@StateDept) January 12, 2026
We will continue to deport these thugs to keep America safe. pic.twitter.com/wuHVltw1bV
ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர், குடியேற்ற சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. தேச பாதுகாப்பை வலுப்படுத்தவும், குடியேற்ற விதிகளை கண்டிப்பாக அமல்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசாவுடன் அமெரிக்காவுக்கு வரும் அனைவரும் சட்டங்களுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாக உள்ளது.

இதற்கு முன், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகமும் எச்சரிக்கை வெளியிட்டிருந்தது. அமெரிக்க சட்டங்களை மீறும் மாணவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதில் தெரிவிக்கப்பட்டது. விசா ரத்து, நாடு கடத்தல் மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அமெரிக்க விசா பெற முடியாத நிலையும் உருவாகலாம் என கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
