சீன பொருட்களுக்கு 104% வரி... ட்ரம்பின் அடுத்த அதிரடி!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற நாடுகள் என்ன இறக்குமதி விதிக்கிறதோ, அதனை கணக்கிட்டு அந்தந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவில் பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் போதும் அதே அளவு வரி இருக்கும்படி புதிய வரி விதிப்பை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதனை அடுத்து, சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு பரஸ்பர வரி 34% வரிவிதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவையடுத்து ஏப்ரல் 4 ம் தேதி சீனா, அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி உயர்வுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிரம்ப், சீனா அரசு அமெரிக்க பொருட்கள் மீதான வரியை திரும்ப பெறவேண்டும் இல்லை எனில் ஏப்ரல் 9க்கு பிறகு சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் வரியை உயர்த்தி 50% வரி விதிக்கப்படும் என சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
டிரம்ப் கொடுத்த காலக்கெடு நேற்றுடன் நிறைவு பெற்றதையடுத்து சீனா தனது வரி விதிப்பை திரும்ப பெறாத காரணத்தால் இன்று ஏப்ரல் 9 ம் தேதி முதல் சீனா பொருட்கள் மீதான கூடுதல் 50% பரஸ்பர வரி அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஏற்கனவே 34% வரி , தற்போது கூடுதலாக 50% அபராத பரஸ்பர வரி என சீன பொருட்கள் மீது 104% வரையில் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது உலக வர்த்தகத்தை பாதிக்கும் சூழல் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!