108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்... பேச்சுவார்த்தையில் சமரசம்!

 
108

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை அதிகரித்து வரும் EMRI Green Health Services நிறுவனத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தொழிற்சங்கம் சார்பில் பல கட்டப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னையில் டி.எம்.எஸ் வளாகத்திலிருந்து முதல்வர் இல்லம் நோக்கி மாபெரும் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டதும் கவனம் பெற்றது.

இந்த சூழலில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊழியர்களின் கோரிக்கைகள், ஊதிய நிலைமை மற்றும் சேவை நிபந்தனைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இரு தரப்பும் சமரச மனப்பான்மையுடன் அணுகியதால் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சங்கச் செயலாளர் இருளாண்டி அறிவித்தார். அவசர சேவை தடையின்றி தொடரும் நிலையில், ஊழியர்கள் கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!