இன்று முதல் 10 ,11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!!

 
துணைத்தேர்வு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி  வெளியிடப்பட்டன. தேர்வில் குறைவான மதிப்பெண்  பெற்றவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் பெறாதவர்கள், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து வருகின்றனர் .  12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான போது பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல . மீண்டும் ஒரு முறை முயற்சிக்கலாம். உடனடியாக துணைத்தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம். இதனால் மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.  

துணைத்தேர்வு

கடந்த ஆண்டு 90.7% மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில், நடப்பாண்டில்  மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16%.  தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம்  முதலிடத்திலும், சிவகங்கை மாவட்டம் 2ம் இடத்திலும், விருதுநகர் மாவட்டம் 3 ம் இடத்தையும் பிடித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 மாணவ-மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர்.  இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு எழுத துணைத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த துணை தேர்வில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்  உடனடியாக தாங்கள் படித்த பள்ளிகள் அல்லது  தேர்வு மையத்தை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

துணைத்தேர்வு அட்டவணை

ஜூன் 27 – மொழிப்பாடம். 
ஜூன் 28 – ஆங்கிலம்
ஜூன் 30 – கணிதம்
ஜூலை 1 – விருப்பத்தேர்வு மொழிபாடம்
ஜூலை 3 – அறிவியல்
ஜூலை 4 – சமூக அறிவியல்

தேர்வு

10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மே 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு மே 24 முதல் 27ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு  மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5ம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத் தேர்லை 7.70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.

மே 19ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான தினத்திலேயே பிற்பகல் தேர்வு முடிவுகள் வெளியாகின. மொத்தம் தேர்வு எழுதிய 7,76,844 மாணவ, மாணவியர்களில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி சதவீதம் 90.93. இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 3,91,968. மாணவர்களின் எண்ணிக்கை 3,14,444. மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.36. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.99. மாணவர்களை விட மாணவியர்கள் 7.37 % அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் 11ம் தேர்வு தேர்ச்சியடையாத மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மே 23ம் தேதி  முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web