உடனே விண்ணப்பீங்க... 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்... இந்திய விமானப்படையில் வேலை..!
இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் : லோயர் டிவிஷன் கிளார்க், இந்தி டைப்பிஸ்ட், ஸ்டோர் கீப்பர், சமையலர், கார்பென்டர், பெயிண்டர், மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப், மெஸ் ஸ்டாஃப், ஹவுஸ் கீப்பிங் ஸ்டாஃப், லாண்ட்ரிமேன், வல்கனைசர், சிவிலியன் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர் போன்ற பதவிகள் உள்ளன.

மாத சம்பளம் : ரூ.18,000 முதல் ரூ.63,200 வரை
கல்வித் தகுதி :
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள்
சில பணிகளுக்கு 10வது அல்லது 12வது தேர்ச்சி சில பதவிகளுக்கு ஐடிஐ மற்றும் முன் அனுபவம்.

வயது வரம்பு : 18 முதல் 25 வயதுக்குள் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம் : கிடையாது.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு/வர்த்தகத் தேர்வு/உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.06.2025
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
