இன்று 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!! எப்படி பதிவிறக்கம் செய்வது ? முழு தகவல்கள்!!

 
தேர்வு

தமிழகத்தில் 11 மற்றும்  12ம் வகுப்புக்கான  பொதுத்தேர்வுகள்  ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதன்படி 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13தேதியும்,  11ம் வகுப்பு பொதுத்தேர்வு  மார்ச் 14ம் தேதியும்  தொடங்கப்பட்டுள்ளன.  மேலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு   ஏப்ரல் 3ம் தேதி வரையும்,  11ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ம் தேதி வரையும்  நடைபெற உள்ளன. 

தேர்வு
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்  ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 20 வரை நடைபெற  உள்ளது. இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதன்படி  https://www.dge.tn.gov.in/  என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  நடப்பு கல்வியாண்டில்  சுமார் 10 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்பு  பொதுத்தேர்வினை எழுத இருக்கின்றனர். 
10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை:

ஏப்ரல் 6: தமிழ் 
ஏப்ரல் 10: ஆங்கிலம்
ஏப்ரல் 13: கணிதம்
ஏப்ரல் 15: விருப்ப மொழி
ஏப்ரல் 17: அறிவியல்
ஏப்ரல் 20: சமூக அறிவியல்

அரசு தேர்வுகள் இயக்ககம்

தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்ததேதி  என தனிப்பட்ட  தகவல்களை அளித்து  ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.இந்த தேர்வு அட்டவணையை பொறுத்தவரை முக்கிய பாடங்களுக்கு இடையே இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி .ஆங்கில பாடத்துக்கு 3 நாட்கள்  விடுமுறையும், கணித  பாடத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும், அறிவியல் பாடத்துக்கு 3 நாட்கள் விடுமுறையும், சமூக அறிவியல் பாடத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்  மே 17ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web