10 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தேவையில்லை!! தமிழக மாணவர்களுக்கு விலக்கு!!

 
தேர்வு

என்.ஐ.டி, ஐ.ஐ.டி , பொறியியல் படிப்புக்களை படிப்பதற்கும், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும் தேசிய அளவில்  ஜேஇஇ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன் இந்த தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வந்தது.தற்போது தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தி வருகிறது. ஜனவரி 24ம் தேதி தொடங்கும் முதல் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 15ம் தேதி முதல் ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றன.

exam தேர்வு மாணவிகள் பரீட்சை கல்லூரி

ஆனால் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு  சிக்கல் எழுந்தது. ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை பதிவிட வேண்டும். தமிழகத்தில் 2020ல் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கமுடியவில்லை.  இதனால் தமிழகம் முழுவதும் 30,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று மட்டும் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஜே.இ.இ தேர்வுக்கு 10-ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அல்லது தரவரிசையை பதிவிட முடியாத நிலை தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டதுஇந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், தமிழக மாணவர்களின் நலன் காக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார்.

நுழைவு தேர்வு

மேலும், ஜே.இ.இ தேர்வில் 10-ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து 10ம் தேர்வு மதிப்பெண் பதிவிடுவதில் இருந்து தளர்வு அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை விடுத்திருந்தது. தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில் விடுக்கப்பட்ட  கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்றுக்கொண்டு விலக்கு அளித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை பதிவிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web