10ம் வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி பலி !! பொதுத்தேர்வு முடிந்ததை கொண்டாடிய போது பரிதாபம்!!

 
முத்துலட்சுமி

புதுச்சேரி முதலியார்பேட்டை அவ்வை நகரில் மணிமாறன் (52)- முத்துலட்சுமி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜீவகன் (14) மகன், அனுஷ்கா (10) என்ற மகள் இருந்தனர். ஜீவகன் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்றுடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெற்றது.

முத்துலட்சுமி

இதை கொண்டாடும் வகையில் நேற்று ஜீவகன் தனது நண்பர்கள் 5 பேருடன் வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரினா கடற்கரை பகுதிக்கு குளிக்கச் சென்றார். அங்கு நண்பர்களுடன் குளித்தபோது ஜீவகன் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கி அவர் கடலில் மூழ்கினார்.

முத்துலட்சுமி

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். அப்போது ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள், சிறுவன் ஜீவகனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். எனினும் ஜீவகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!