10 ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிப்பு!!

 
exam தேர்வு மாணவிகள் பரீட்சை கல்லூரி

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ளார்.  மாநில அளவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% . பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும் சிவகங்கை மாவட்டம் 2வது இடத்திலும் விருதுநகர் மாவட்டம் 3 வது இடத்தையும் பிடித்துள்ளன.

தேர்வு

இந்நிலையில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 மாணவ-மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர்.  10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு ஜுன் மாதத்தில் துணைத் தேர்வு நடத்தப்படும் எனவும்,  துணைத்தேர்வுக்கு மே 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும்  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு  பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொது தேர்வில் 94.66% மாணவிகளும், 88.16% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகள்

இதன் மூலம் மாணவர்களை விட மாணவிகள் 6.5% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு 90.7% மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில், நடப்பாண்டில்  மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது.  தமிழ் பாடத்தில் எந்த மாணவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்கவில்லை. இந்த தேர்வில் மாவட்ட வாரியாக 97.67% பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும் 83.54% சதவீத தேர்ச்சியுடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web