இன்று 10 ம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் நகல் வெளியீடு!

 
அரசு தேர்வுகள் இயக்ககம்


 

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தோ்வு  மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியான நிலையில் இந்தத் தோ்வு எழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில்  மாணவா்களுக்கான நகல் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதையடுத்து மாணவா்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை https://dge.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

அரசு தேர்வுகள் இயக்ககம்

அதன்பின் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் அதே இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களைபப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்ப படிவங்களை   பூா்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து ஜூன் 16, 17, 18  தேதிகளில் மாவட்ட தோ்வு உதவி இயக்குநா் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். 

அரசு தேர்வுகள் இயக்ககம்

புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாணவா்கள் விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505, மறுகூட்டலுக்கு ரூ.205 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது தரப்படும் ஒப்புகை சீட்டை தோ்வா்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகை சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி தான் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை அறிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது