10ம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் பலாத்காரம்... குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை!

 
கைது

திருவண்ணாமலை சின்னக்கல்லாபாடி பகுதியைச் சேர்ந்த பொன்முடியின் மகன் பிரபு (30), 2022-ஆம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பழகிவந்ததாகவும், பின்னர் கடத்திச் சென்று குழந்தைத் திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

பாலியல் தொல்லை

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வெரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்டதுடன், பிரபுவை போக்சோ சட்டம் மற்றும் குழந்தைத் திருமணத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வழக்கு திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி காஞ்சனா உத்தரவு வழங்கினார். அதில், சிறுமியை கடத்தி குழந்தைத் திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தில் பிரபுவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பின்னர் அவர் வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!