10 வது பாஸானா போதும்!! விமான நிலையத்தில் 495 பணியிடங்கள்!!

 
விமான நிலையம்

இந்திய விமானச் சேவைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் , விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர் சேவை அதிகாரி, இளநிலை வாடிக்கையாளர் சேவை அதிகாரி, ராம்ப் இயக்குனர், உதவியாளர் உட்பட  495  பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 


வாடிக்கையாளர் சேவை அதிகாரி
பணியிடங்கள் :80 கல்வித்தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு 
வயதுத் தகுதி : 28 வயது வரை  குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 
சம்பளம் : ரூ. 25,980

இளநிலை வாடிக்கையாளர் சேவை அதிகாரி
பணியிடங்கள் :64 
கல்வித்தகுதி : 12 ம் வகுப்பில்  தேர்ச்சி
வயதுத் தகுதி : 28 வயது வரை  குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 
சம்பளம் : ரூ. 23,640

பணி நீக்கம் வேலை ஊழியர்கள்

ராம்ப்  இயக்குநர் 

பணியிடங்கள் 121
கல்வித்தகுதி : டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது : 28 வயது வரை .குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 25,980

ராம்ப் உதவியாளர்
பணியிடங்கள் :230
கல்வித்தகுதி : 10 ம் வகுப்பு தேர்ச்சி 
வயதுத் தகுதி : 28 வயது வரை  
OBC  மற்றும்  SC/ST பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 23,640

ஏர் இந்தியா

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.aiasl.in/resources/Advertisement%20of%20Chennai%20Recruitment.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.  விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன்  நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : 
Office of the HRD Department, 
AI Unity Complex, 
Pallavaram Cantonment, 
Chennai -600043.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :

Customer Service Executive: 17.04.2023

Jr. Customer Service Executive: 18.04.2023

Ramp Service Executive / Utility Agent Cum Ramp Driver: 19.04.2023

Handyman : 20.04.2023

விண்ணப்பக் கட்டணம்: நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் 500 ரூபாய்க்கு மும்பையில் மாற்றத்தக்க வகையில் AI AIRPORT SERVICES LIMITED என்ற பெயரில் டிடி எடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணச்சலுகை நிச்சயம்.  
இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://www.aiasl.in/resources/Advertisement%20of%20Chennai%20Recruitment.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web