10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை செய்முறை தேர்வு தொடக்கம்!
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 2025-26 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை முறையாக நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு Directorate of Government Examinations Tamil Nadu அறிவுறுத்தியுள்ளது.
மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 4,219 மையங்களில் 9,09,002 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அறிவியல் செய்முறைத் தேர்விற்கு 25 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலை 9–11 மணி மற்றும் மாலை 2–4 மணி என இரண்டு வேளைகளில் தேர்வு நடத்தப்படும்.
மாற்றுத் திறனாளி மாணவர்கள் செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் விவரங்களையும் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச் 2க்குள் மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிக்கவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
