தெருநாய் கடித்துக் குதறியதில் 10 வயது மாணவி உயிரிழப்பு!

 
நாய்க்கடி நாய்

பெங்களூருவில் தெருநாய்களின் அட்டூழியம் ஒரு பிஞ்சுயிரைப் பறித்துள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு, பாகல்கோட்டை மாவட்டம் நவநகர் பகுதியைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி அலைனா லோகா (10), தெருநாய் கடித்ததில் ஏற்பட்ட பாதிப்புகளால் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த டிசம்பர் 27ம் தேதி, அலைனா தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த தெருநாய் ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியைக் கடித்துக் குதறியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் நாயை விரட்டினர். ஆனால், அதற்குள் சிறுமியின் கண், மூக்கு மற்றும் கன்னம் ஆகிய பகுதிகளில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன

.நாய் நாய்கள் தெருநாய்

பாகல்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் உயர்தர சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் (KIMS) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சுமார் 20 நாட்களாகத் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிறுமி, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துறுதுறுவென விளையாடிக்கொண்டிருந்த மகள், ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு பெற்றோர் நிலைகுலைந்து போயினர். சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வருவார் என எதிர்பார்த்த நிலையில், சிறுமியின் மரணம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நவநகர் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!