மக்கள் கடும் அவதி... 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில் !

தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை நேற்று, 11 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. தமிழகத்தில் நேற்று காலை, 8:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானவது வரை மழை பெய்துள்ளது.
மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று வறண்ட வானிலை நிலவக் கூடும். நாளை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் ஏப்ரல், 2 வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக் கூடும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நேற்று மதுரை, சேலம், கரூர் மாவட்டம் பரமத்தி, திருச்சி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, வேலுார், ஈரோடு, தர்மபுரி, சென்னை, கோவை நகரங்களில், வெயில், 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சேலத்தில், 39.8, ஈரோடு மற்றும் மதுரையில் 39.6, சென்னையில் 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!