வளைகுடா நாடுகளுக்கு செல்லும் 11 விமானங்கள் ரத்து!

 
விமானம்


 
மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் 3 அணு ஆயுத தளவாடங்கள் மீது பஸ்டர் பங்கர் குண்டுகளைப் போட்டு அமெரிக்கா அதிரடியாகத் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, திங்கட்கிழமை இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் அதிரடியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.

விமானம் விமான நிலையம்


இந்நிலையில், இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர்நிறுத்தம் செய்யப்பட்டு இருப்பதாக  டிரம்ப் தெரிவித்துள்ளார்.  இருப்பினும், இருநாடுகளுக்கு இடையே எந்த போர் நிறுத்தமும் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.  இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமானம் விமான நிலையம்


ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், லெபனான், இராக், கத்தார், குவைத், சௌதி அரேபியா, ஜோர்டான், ஓமன் உட்பட வளைகுடா நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன. இதனால் தோஹா, அபுதாபி, குவைத், துபாய் நாடுகளுக்கு செல்லும் 6 விமானங்களும் சென்னை வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இன்று லண்டன், பஹ்ரைன், அபுதாபி செல்லும் விமானங்கள் அனைத்தும் தாமதமாக இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது