பள்ளியில் பயங்கரம்... விஷம் குடித்த பிளஸ் 1 மாணவி!

 
விஷம்
 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் ஒரு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். ஜங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவரும் இந்தப் பள்ளியில் படிக்கிறார். அவர் பதினோராம் வகுப்பு (பிளஸ்-1) மாணவி ஆவார். வழக்கம்போல நேற்று காலை 9 மணிக்கு அந்த மாணவி பள்ளிக்கு வந்தார். ஆனால், அவர் மிகவும் சோர்வாகவும், வாடிய முகத்துடனும் காணப்பட்டார். இதை அவரது தோழிகள் கவனித்தனர்.

ஆம்புலன்ஸ்

உடல்நிலை சரியில்லையா என சக மாணவிகள் அந்த மாணவியிடம் கேட்டனர். அப்போது அந்த மாணவி அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். 'நான் விஷம் குடித்துவிட்டேன்' என்று அவர் தோழிகளிடம் கூறினார். இதைக் கேட்ட சக மாணவிகள் பயந்துபோனார்கள். அவர்கள் உடனடியாக இந்த விவரத்தை பள்ளி ஆசிரியைகளிடம் தெரிவித்தனர். ஆசிரியைகள் மாணவியின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு பேசினர். தகவல் அறிந்து பெற்றோர் பதறியடித்து பள்ளிக்கு வந்தனர்.

போலீஸ்

உடனடியாகப் பெற்றோர் அந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியின் குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருந்துள்ளன. இதனால் அவர் மனமுடைந்துபோனார். அதன் காரணமாகவே மாணவி விஷம் குடித்துவிட்டுப் பள்ளிக்கு வந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!