முன்விரோத கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை... கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

 
சிவனுபாண்டி
 


தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே அத்தாளநல்லூரில் வசித்து வருபவர்  சின்னத்துரை என்ற நவநீதகிருஷ்ணன் 38.  இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். இதில் சிவனுபாண்டி உப்பு வாணிய முத்தூரை சேர்ந்தவர்.  இரு தரப்பினருக்கு இடையே கோவில் கொடை, ஆடுகள் காணாமல் போய் திரும்பி வந்தது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

2009 மார்ச் 10ம் தேதி சிவன் பாண்டி மகன் குணசேகரன், தமது தம்பி சுப்பிரமணியனை சிலர் தாக்கியதை கண்டித்து கேட்க சென்றனர். அப்போது, சின்னதுரை மற்றும் உறவினர்கள் அர்ச்சுனன், மணிகண்டன்  சேர்ந்து குணசேகரனை சராமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். குணசேகரன் குடும்பத்தினர் சின்னத்துரை என்ற நவநீதி கிருஷ்ணன் தரப்பினர் வயலில் அறுவடையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டனர்.இரு தரப்பினரும் வயலில் அரிவாள், வாள் உட்பட பலவகையான  ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதில் சின்னத்துரை 38, அவரது அக்காள் பாண்டியம்மாள் 46, பாண்டியம்மாள் மகன் மணிகண்டன் 25, உறவினர் முத்துப்பாண்டி 30 ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

நீதிமன்றம்

சிலருக்கு அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது.இந்த இரண்டு கொலை சம்பவங்களும் திருநெல்வேலி 3 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், குணசேகரன் கொலை வழக்கில் மீதம் இருக்கும் குற்றவாளி அர்ச்சுனனுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். அந்த வழக்கில் கைதான மணிகண்டன் உயிரிழந்துவிட்டார். சின்னத்துரை, பாண்டியம்மாள்,மணிகண்டன், முத்துப்பாண்டி 4 பேர் உட்பட  கொலை சம்பவத்தில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதில் மூன்று பேர் வழக்கு நடந்த போது இறந்து விட்டனர். மீதமுள்ள 10 பேருக்கு நான்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ 3500 அபராதம் விதித்தார்.
இதில் உப்பு வாணியமுத்தூர் சொர்ண பாண்டி 60, முத்துப்பாண்டி 63, கருத்தபாண்டி 47, ஆறுமுக நயினார் 41, சுப்பிரமணியன் 36, முருகன் 41, மகாராஜா 42, கருத்தப்பாண்டி 50 , ஆதிமூலகிருஷ்ணன் 39 மாயாண்டி 84 ஆகியோருக்கு 4 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web