11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!! முதலிடத்தை பிடித்த திருப்பூர்!!

 
தேர்வு முடிவுகள்

தமிழகத்தில்  2023ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 13ம் முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த சுமார்  7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். 11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதளங்கள்  மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் sms மூலமாகவும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.  

தேர்வு

மேலும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம் .தமிழகத்தில் 11 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 4,000 மையங்களில் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன.  கடந்த  ஆண்டில்  90.07  சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம்  நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. இதில், மாணவிகள் 94.99 சதவீதம், மானவர்கள் 84.86 சதவீத தேர்ச்சியும் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


தேர்ச்சி விகிதத்தில் முதல் 5 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்

தேர்வு முடிவுகள்
96.38% தேர்ச்சியுடன் திருப்பூர் முதலிடத்திலும், 96.18% தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் 2வது இடத்திலும் உள்ளன. மூன்றாவது இடத்தில் கோவை 95.73% தேர்ச்சியுடனும், நாமக்கல்  95.60% தேர்ச்சியுடன் 4 வது இடத்திலும் , தூத்துக்குடி  95.43% தேர்ச்சியுடன் 5 வது இடத்திலும் உள்ளன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web