11 தமிழக மீனவர்கள் அதிரடி கைது... நடுக்கடலில் மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்!

 
23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தனது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்வதும் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது. இலங்கை அரசின் இந்த தொடர் அத்துமீறல் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடல் படகு மீனவர்கள் மீன்

இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்தது. சர்வதேச எல்லையைத் தாண்டியது என்ற குற்றச்சாட்டின் கீழ் 11 மீனவர்களை அதிரடியாக கைது செய்தது. அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகத்தில் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மீனவர்கள்

ஏற்கனவே கடந்த மாதம் 28-ம் தேதி மண்டபத்தைச் சேர்ந்த 3 மீனவர்களும் 30-ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3 மீனவர்களும் கைதாகி உள்ளனர். அவர்களின் படகுகளும் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடக்கும் இந்த கைது சம்பவங்கள் தமிழக கடலோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மாநில அரசுகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!