மாணவர்கள் உற்சாகம்... 2025-26 கல்வியாண்டில் மொத்தம் 110 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!

2025-26 ம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் ஜூன் 2ம் தேதி தொடங்கியது. பள்ளிகள் திறந்து ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில், இந்த கல்வியாண்டுக்கான நாட்காட்டியை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த கல்வியாண்டுக்கான மொத்த வேலை நாட்கள் 210. அனைத்து சனி ஞாயிற்றுக்கிழமையிலும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 18 முதல் 26 வரை காலாண்டு தேர்வுகள், செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை காலாண்டு விடுமுறை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை வருகிறது.
அதே போல் டிசம்பர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு, அதன் பிறகு டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை அரையாண்டு விடுமுறையும் விடப்படும் .
இதனையடுத்து ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறையும், பிப்ரவரி 1ம் தேதி தைப்பூச நாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.10.4.2026 முழு ஆண்டு தேர்வு தொடங்கப்படும். 24.4.2026 அன்று தான் கடைசி வேலை நாள். 25.4.2026 முதல் அடுத்த ஆண்டிற்கான கோடை விடுமுறை தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!