சென்னை முழுவதும் 110 மின்சார தாழ்தள பேட்டரி பேருந்துகள்!

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், மின்சார பேட்டரி பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த 10 நாட்களில் தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த முயற்சி, சென்னையை மாசு இல்லாத, பசுமையான நகரமாக மாற்றுவதற்கான தமிழ்நாடு அரசின் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மாநகர போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படவுள்ள இந்த பேட்டரி பேருந்துகள், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் அதிக செயல்திறனுடன், பயணிகளுக்கு நல்ல பயண அனுபவத்தை வழங்கும்.
அதன்படி முதற்கட்டமாக 1,100 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக, 2023ம் ஆண்டு ஜெர்மன் வங்கியின் நிதி உதவியுடன் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கு டெண்டர் வெளியிடப்பட்டது. இந்த பேருந்துகள், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 240 கிலோமீட்டர் வரை 54 பயணிகளை ஏற்றி கொண்டு இயங்கும் செயல் திறன் கொண்டவை.
குறிப்பாக உயர்நிலை பாதுகாப்பு அம்சங்களான தீ அபாய எச்சரிக்கை அமைப்பு, பின்புற கேமராக்கள் மற்றும் தானியங்கி கதவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது ” சென்னை மாநகரம் மாசடையாமல் தடுக்க பேட்டரி பேருந்துகள் சேவை விரைவில் தொடங்கப்படும். இன்னும் 10 நாட்களில் முதல்வர் ஸ்டாலின் இந்த சேவையை தொடங்கி வைப்பார். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும், பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. எனவே, அதன் ஒரு பகுதியாக தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!