தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, இன்றும் மழை நீடிக்கக்கூடும் என புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்க வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
