நள்ளிரவு முதல் தொடர் மழை!! 12 விமானங்கள் தாமதம்!! பயணிகள் கடும் அவதி!!

 
விமானம்

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் முக்கிய பகுதிகளான   தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நந்தனம், தி.நகர், நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம், கிண்டி, சைதாப்பேட்டை,  அசோக்நகர், மத்திய கைலாஷ், அடையாறு, திருவான்மியூர் உட்பட பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. தமிழகத்தில் ஜூலை18 வரை பல பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

ஏர் இந்தியா விமானம்


இந்நிலையில் சென்னையில் நள்ளிரவில் திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளன.  லண்டன், மலேசியா, சிங்கப்பூர், திருச்சியில் இருந்து வந்த விமானங்களும், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டே இருந்தன.

விமானம் விமான நிலையம்

நீண்ட நேரம் கழித்தே தரையிறங்கின.  விமானங்கள் தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்து பறந்த நிலையில் ஒரு விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.    4 விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 12 விமானங்கள் 30 நிமிடம் முதல் 3 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்களும் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web