முக்கிய தலைவர் உட்பட சத்தீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சரண்!

 
நக்சலைட்டுகள்
 


சத்தீஷ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உட்பட  பல மாநிலங்களில் நக்சலைட், மாவோயிஸ்ட் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. இவர்களை முற்றிலும் ஒழிக்க மாநில சிறப்பு போலீஸ் படையுடன் மத்திய பாதுகாப்புப் படையினரும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் நாட்டில் நக்சலைட், மாவோயிஸ்ட் பிரச்சினைக்கு முடிவுகட்ட மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளதால், களத்தில் நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளன.

நக்சலைட்

இந்நிலையில், சத்தீஷ்கர் மாநிலம் கைராகர்–சுய்காடன்–கண்டாய் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 12 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரண் அடைந்துள்ளனர். தொடர் அழுத்தம், பாதுகாப்புப் படைகளின் தீவிர நடவடிக்கை மற்றும் அரசின் மறுவாழ்வு திட்டங்கள் காரணமாக பலர் சரணடைந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சரணடைந்தவர்களில் முக்கிய நக்சலைட் தலைவரான ரமந்ஹர் மாஜியும் இடம் பெற்றுள்ளார். இவரது தலைக்கு ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சரண் அடைந்த அனைவருக்கும் மாநில அரசின் மறுவாழ்வு திட்டங்கள் வழங்கப்படும் எனவும்,  இது நக்சலைட்களை முழுமையாக கட்டுப்படுத்தும் முயற்சியில் முக்கிய முன்னேற்றம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!