தமிழக மீனவர்கள் 12 பேர் கைது... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!
தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கையின் காங்கேசன் துறை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக மீனவர்களிடம் இருந்து ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 12 பேர் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதால் மீனவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். எந்த கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் வந்தாலும் மீனவர்களின் பிரச்சனைகளைக் கண்டுக்கொள்ளாமலே இருந்து வருகின்றன.
எங்கோ கனடாவுக்கு எதிராக இந்தியா கர்ஜிக்கின்றது. இஸ்ரேல், ஈரான் போர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்தியஸ்தம் செய்கிறது. ஆனால் அண்டை நாடான இலங்கை செய்கிற அட்டூழியங்களுக்கு பதிலடி தராமலே இருந்து வருகிறது. தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!