பெற்றோர்களே உஷார்... பேன் தொல்லையால் 12 வயது சிறுமி பலி… அதிர வைக்கும் உண்மை!
ஒடிசா மாநிலம் பூரி பலங்கா பகுதியில் சேர்ந்த 12 வயது சிறுமி லட்சுமிப்ரியா சாஹு, கடுமையான பேன் தொல்லையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தலையில் பல மாதங்களாக பேன்கள் இருந்ததாகவும், சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தலையில் ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக வெளியே செல்வதையும் சிறுமி நிறுத்தியதாக கூறப்படுகிறது.
தனது உடல்நிலை பிரச்சினையை குடும்பத்தினரிடமிருந்து சிறுமி மறைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு சிறுமி திடீரென இரத்த வாந்தி எடுத்ததால், உடனடியாக பூரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு சிறுமி உயிரிழந்தார்.
சிறுமியின் தலையை மொட்டையடிக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு சிறுமி சம்மதிக்காமல் அழுததாக கூறப்படுகிறது. சிகிச்சையளிக்கப்படாத பேன் தொல்லையின் ஆபத்தை இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
