பனிமூட்டம் தாக்கம்… 128 விமானங்கள் ரத்து, பயணிகள் அவதி!

 
பனிமூட்டம்

தலைநகர் தில்லியில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் பனிமூட்டம் விமானப் போக்குவரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இன்று காலை முதல் தில்லி விமான நிலையத்தில் 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதில் புறப்பட வேண்டிய 64 விமானங்களும், வருகை தர வேண்டிய 64 விமானங்களும் அடங்கும்.

பனிமூட்டம்

மேலும் 8 விமானங்கள் மாற்றுப் பாதைக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். Flightradar24 தகவலின்படி, ஒவ்வொரு விமானத்திற்கும் சராசரியாக 24 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பனிமூட்டம்

பனிமூட்டம் காரணமாக காட்சித்திறன் குறைந்திருந்தாலும் தற்போது படிப்படியாக மேம்பட்டு வருவதாக தில்லி விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தில்லி மற்றும் வட இந்தியாவின் பல விமான நிலையங்களில் இன்னும் பனிமூட்டம் நீடிப்பதால் விமான சேவைகள் இயல்புக்கு திரும்புவதில் தாமதம் ஏற்படும் என விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!