+2 பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி அரசுப் பேருந்து மோதி பலி... பெரும் சோகம்!
தமிழகத்தில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், மதுரை மாவட்டம் அல்லிக்குளம் பகுதியில் சாலை விபத்தில் 17 வயது மாணவி துர்கா தேவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினருடன் இருசக்கர வாகனத்தில் தேர்வு மையத்துக்கு சென்றபோது தவறி கீழே விழுந்த மாணவியை அரசு பேருந்து மோதியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் 3,412 மையங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளில் தமிழ் மற்றும் பிற மொழித் தேர்வுகள் நடைபெற்றன.

விபத்துக்குப் பின்னர் மாணவியின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வு எழுதச் சென்ற மாணவி உயிரிழந்த செய்தி பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
