குடை எடுத்திட்டு போங்க!! 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!

 
ரெட்

தமிழகத்தில் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் வெயில் கொளுத்தி வருகிறது. இடையில் பெய்த கோடை மழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. தற்போது தினமும் 10க்கும் மேற்பட்ட  பகுதிகளில் வெப்பநிலை 100டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் காலை 10 மணி முதல் 4 மணி வரை வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் தொடரும் ரெட் அலர்ட்!!

தமிழகத்தின்  பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,  தமிழகம், புதுச்சேரி காரைக்கால்  பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் முதமான மழை பெய்யலாம்.   நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரெட்

நாளை மே 22ம் தேதி திங்கட்கிழமை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மே 23ம் தேதி   நாளை மறுநாள்  செவ்வாய்க்கிழமை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை” எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web