அமித்ஷாவின் நிகழ்ச்சியில் 13 பேர் உயிரிழப்பு! 120 பேர் மருத்துவமனையில் அனுமதி! ரூ.5 லட்சம் இழப்பீடு... !

 
அமித்ஷா

பெரும் அதிர்ச்சியாக மகாராஷ்டிரா மாநிலத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில், கடும் வெயிலில் எந்த விதமான பந்தல் உள்ளிட்ட தடுப்பும் இல்லாமல் காத்திருந்த தொண்டர்கள், வெயில் தாக்கத்தினால் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 120க்கும் மேற்பட்டோர் வெயில் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று, மகாராஷ்டிரா அரசு சார்பில் ‘மராட்டிய பூஷண் விருது’ வழங்கும் விழா நவிமும்பை பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். விழாவிற்கு வருகை தருபவர்களுக்கு வெயில் படாதவாறு இருக்க  பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. விழாவில் திரண்டிருந்த தொண்டர்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த விழாவில், ஆன்மிக தலைவரும், சமூக ஆர்வலருமான அப்பாசாகிப் தர்மாதிகாரிக்கு மராட்டிய பூஷண் விருதை அமித்ஷா வழங்கி கௌரவித்தார். சுமார் 306 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட மைதானத்தில் நடந்த விழாவில், அப்பாசாகிப் தர்மாதிகாரியின் ஆதரவாளர்கள், லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொள்ள மக்கள் அதிகாலையில் இருந்தே சாரை, சாரையாக கூடத் தொடங்கினர். ஆனால் விழா காலை 11.30 மணியளவில் தான் தொடங்கியது. இதனால் அவர்கள் வெயிலில் நெடுநேரம் காத்திருக்க நேரிட்டது.

Mumbai

பங்கேற்பாளர்களுக்கு திறந்த வெளியில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாக தெரிகிறது. வெயிலில் இருந்து பாதுகாக்க கொட்டகைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுவெளியில் அமர்ந்து இருந்த பார்வையாளர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பலர் நீர்சத்து குறைபாட்டால் அவதிப்பட்டனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மைதானத்தில் கூடியிருந்த தொண்டர்கள் கூட்டத்திற்கு குடிப்பதற்கு தண்ணீர் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மொத்தம் 123 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் பலரின் உடல்நிலை மிக மோசமாக இருந்தது. இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. 

அமித்ஷா

இந்நிலையில் பல்வெல்லில் உள்ள எம்.ஐி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 11 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவில் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது  சிகிச்சைப் பலனளிக்காமல் மேலும் இருவர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும், 24 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இருந்தும் மருத்துவமனையில் அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார். இது குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web