ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 13 பேர் பரிதாப பலி!
மெக்சிகோவின் ஒக்சாகா – வெராகுரூஸ் மாகாணங்களை இணைக்கும் இண்டர்ஓஷெனிக் ரெயில் எதிர்பாராத விதமாக தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் இந்த முக்கிய ரெயில், நிசாண்டா நகரம் அருகே சென்றபோது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் 98 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை வழங்க கடற்படைச் செயலாளரும், மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ளதாக மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷென்பாம் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி அண்ட்ரெஸ் மானுவேல் லோபஸ் திறந்து வைத்த இந்த ரெயில் விபத்துக்குள்ளானதன் காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
