சென்னையில் இன்று 13வது 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்!
சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டை மண்டலத்தில் இன்று இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுவரை நடந்த 12 முகாம்கள் மூலம் சுமார் 30 ஆயிரம் பேர் பயனடைந்துள்ள நிலையில், இன்று 13-வது முகாம் நடத்தப்படுகிறது.

இன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகம், கல்யாணபுரம், தண்டையார்பேட்டை மண்டலம், சென்னையில் நடைபெற உள்ளது. இந்த முகாம் வெறும் மருத்துவ பரிசோதனைக்காக மட்டும் அல்லாமல், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறவும் ஒரு நல்வாய்ப்பாக அமைகிறது:
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் (CMCHIS) புதிய உறுப்பினராகப் பதிவு செய்தல். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல வாரிய அடையாள அட்டைகள் வழங்குதல். மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் பெறுவதற்கான ஆலோசனைகள். ஊட்டச்சத்து குறைபாடுகளைப் போக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
