கேரளாவில் 13 வயது சிறுமி பலாத்காரம்... தஞ்சாவூரில் பதுங்கியிருந்த தமிழக வாலிபர் கைது!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 13 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், தமிழகத்தைச் சேர்ந்த வாலிபரை இரண்டு மாதத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கேரளப் போலீசார் தஞ்சாவூரில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அடுத்த கட்டிமேடு காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (26). இவர் மீது ஏற்கனவே தமிழகத்தில் கொலை முயற்சி மற்றும் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா சென்ற பாலாஜி, கோழிக்கோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியுடன் பாலாஜிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட அவர், அந்தச் சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், கோழிக்கோடு கோயிலாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். போலீஸ் நடவடிக்கையை அறிந்த பாலாஜி, அங்கிருந்து உடனடியாகத் தலைமறைவானார். போலீசார் தன்னைக் கண்டுபிடிப்பதைத் தவிர்க்க, அவர் செல்போன் பயன்படுத்துவதையும் தவிர்த்துள்ளார். இதனால் கடந்த இரண்டு மாதங்களாகப் போலீசார் அவரைப் பிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.

தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பாலாஜி தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கோயிலாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமித்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தஞ்சாவூர் விரைந்தனர். அங்குத் தனது வீட்டில் பதுங்கியிருந்த பாலாஜியை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாலாஜியைக் கேரளா அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், தமிழகத்தில் தன் மீதுள்ள கிரிமினல் வழக்குகளில் இருந்து தப்புவதற்காகக் கேரளா வந்ததும், அங்குச் சிறுமிக்குக் கொடுமை இழைத்ததும் உறுதியானது. தற்போது அவர் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
