இந்தியாவில் ஐஎம்ஓ உட்பட 14 செயலிகளுக்கு தடை... பயனர்கள் அதிர்ச்சி!

 
ஆப்களுக்கு தடை

இந்தியாவில் ஆன்லைன் குற்றங்கள், மோசடிகள் அதிகரித்து வருகின்றன. சைபர் க்ரைம் மூலம் இதற்கான தகவல்களின் அடிப்படையில் குற்றங்கள் களையப்பட்டு வந்தபோதிலும் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. சமூக வலைதளங்களை பொறுத்தவரை தேவைக்குரியதை மட்டுமே பயன்படுத்தி, வேண்டாததை ஒதுக்க கற்றுக் கொள்ள வேண்டும் என சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

ஆப்களுக்கு தடை

உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதில் சீன செயலிகளுக்கு  அதிரடியாக கடந்த ஆண்டுகளில் தடை விதிக்கப்பட்டன. இந்த செயலிகள் மூலம் தனிப்பட்ட நபர்களின்  முக்கிய விபரங்கள் திருடப்பட்டு வருவதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை குடிமக்களின் பாதுகாப்பில் அதீத அக்கறையுடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனிப்பட்ட வகையில் இந்தியர்களின் தகவல்களை திருடும் செயலிகளை அறிந்து அதனை தடை விதித்து வருகிறது. இதுதவிர சீனா மற்றும் சீனாவுடன் தொடர்பு கொண்ட செயலிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஆப்களுக்கு தடை

அதன் ஒரு பகுதியாக  இந்தியாவில் ஐஎம்ஓ, மெசேஞ்சர்  உட்பட  14 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாத தொடர்புடைய செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  தடைசெய்யப்பட்ட செயலிகளின் பட்டியலை பொறுத்தவரை  Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second line, Zangi மற்றும் Threema ஆகியவை . 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!