உள்ளாட்சி தேர்தலில் வன்முறை... மேற்கு வங்கத்தில் 14 பேர் பலியான சோகம்!

 
வன்முறை

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட்டதில் மாநிலம் முழுவதும் பெரும் வன்முறை தலைவிரித்து ஆடியது. இந்த வன்முறையில் 18க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அத்துடன் வாக்குச்சாவடிகள் அடித்து உடைக்கப்பட்டன. பேருந்துகள், கடைகள், இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பும் தொடர்ந்தது.

வன்முறை

இதனால் பெரும் கலவரம் வெடித்தது.  இந்த தேர்தலில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் கடும் வாக்குவாதமும் சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன. மக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இதற்கிடையில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை மொத்தம்  3,341 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன, மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள 73,887 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி வரை   நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் 50.52 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் 3 அடுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.  22 மாவட்டங்களில் 928 உறுப்பினர்கள், 9,730 பஞ்சாயத்து சமிதிகள், 63,229 கிராம ஊராட்சி உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக இந்த தேர்தல் நடத்தப்பட்டது. 5.67கோடி வாக்காளர்கள் .  இந்த தேர்தலில், 2.06 லட்சம் பேர் போட்டியிட்டனர்.  


2018ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 34 சதவீத இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில்  நடைபெற உள்ளதால், இந்த உள்ளாட்சித் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உள்ளாட்சி நிர்வாகத்தைக் கைப்பற்ற ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, இந்திய மதச் சார்பற்ற முன்னணி  கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.   தேர்தலை பாதுகாப்பாக நடத்த 65,000 மத்திய பாதுகாப்புப் படை வீரர்களும்,  70000 மாநில போலீசும்   பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், வாக்குப் பதிவு தொடங்கியது முதல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web