சத்தீஸ்கரில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

 
நக்சலைட்டுகள்

சத்தீஸ்கரின் பிஜாப்பூர், சுக்மா பகுதிகளில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசாருடன் இணைந்து நடத்திய இந்த நடவடிக்கை வனப்பகுதிகளில் கவனம் செலுத்தி முன்னெடுக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

நக்சலைட்டுகள்

சுக்மாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மங்டு (டிவிசிஎம்) உட்பட 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேபோல் பிஜாப்பூர் மாவட்டம் பசகுடா அருகே உள்ள ககன்பள்ளி காடுகளில் ஹுங்கா மட்காம் உட்பட இரண்டு மாவோயிஸ்ட்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அங்கிருந்து ஒரு எஸ்எல்ஆர் துப்பாக்கி மற்றும் ஒரு 12 போர் துப்பாக்கி மீட்கப்பட்டது.

நக்சலைட்டுகள்

நக்சலைட்டுகள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் சத்தீஸ்கரில் நடந்த மோதல்களில் 285 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!