கதறி துடித்த தந்தை... டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்து 14 வயது சிறுமி மாரடைப்பில் பலி...!

சாம்பியன் டிராபி கோப்பை இறுதிப்போட்டி இந்தியா நியூசிலாந்து இடையே துபாயில் நடைபெற்றுள்ளது. உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில் இந்தியா 3வது முறையாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. கடந்த வருடம் டி20 உலக கோப்பை தொடரை வென்ற நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபியை வென்று தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஐசிசி கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது.
இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரயன்ஷி என்ற 14 வயது சிறுமி இறுதிப்போட்டி நடந்த நாளில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோஹ்லி இந்த மேட்சில் விளையாடிய போது அவுட் ஆனதை பார்த்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தான் அவரது உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து அவரின் தந்தை அஜய் "எனது பெண் உயிர் இழந்த நேரத்தில் கோஹ்லி பேட்டிங் செய்ய களத்தில் கூட இறங்கவில்லை. என் மகள் இறந்தது எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்டது தான்." என விளக்கம் அளித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!