ஜம்மு–காஷ்மீரில் 1,400க்கும் மேற்பட்ட சட்டவிரோத கட்டிடங்கள் இடிப்பு!

 
கிரேன்

ஜம்மு–காஷ்மீரில் கடந்த 2024 அக்டோபர் மாதம் முதல் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் உள்ளிட்ட 1,425 கட்டமைப்புகள் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யூனியன் பிரதேசமான ஜம்மு–காஷ்மீரின் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த முதல்வர் ஒமர் அப்துல்லா, இந்த தகவலை வெளியிட்டார். அனைத்து நடவடிக்கைகளும் உரிய விசாரணைகள் மற்றும் நடைமுறைகளுக்குப் பின் மேற்கொள்ளப்பட்டதாக அவர் உறுதியளித்துள்ளார்.

இடிக்கப்பட்ட கட்டிடங்களில் 1,194 குடியிருப்பு கட்டடங்களும், 231 வணிகக் கட்டடங்களும் அடங்குகின்றன. இதில், அதிகபட்சமாக ஸ்ரீநகரில் 119 வணிகக் கட்டமைப்புகள் உட்பட 1,133 கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜம்மு மாவட்டத்தில் 75 வணிகக் கட்டமைப்புகள் உட்பட 237 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.இதேநேரத்தில், ஜம்முவில் உள்ள பத்திரிகையாளர் அர்ஃபாஸ் அஹமது டாரின் வீடும் கடந்த நவம்பர் மாதத்தில் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!