மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு!! வீட்டை விட்டு வெளியே வராதீங்க!!

 
தூத்துக்குடி

தூத்துக்குடியில்  மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 14ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் நாளை மே 12 மற்றும் மே 13ம் தேதிகளில் வீரசக்கதேவி கோயில் திருவிழா நடைபெற உள்ளது.

144

இதனையொட்டி  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5  அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், திருவிழாவில் கலந்து கொள்பவர்கள் கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிடப்பட்ட திருமணம் மற்றும் திடீரென நடத்தப்படும் இறுதிச் சடங்கு ஊர்வலங்களுக்கு 144 தடை உத்தரவு பொருந்தாது.

144 தடை

அதே நேரத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலா வாகனங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சமூக கூட்டங்கள்,  அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற இருந்தால், மாவட்டநிர்வாகத்தின் அனுமதி பெற்ற பிறகே நடத்தப்பட வேண்டும் என  உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web