15 கல்லூரி மாணவிகளுக்கு திடீர் வாந்தி , மயக்கம்!! மாணவிகள் கல்லூரிக்கு முன்பு போராட்டம்!!

 
வாந்தி மயக்கம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செவிலியர் கல்லூரி ஒன்று செயல்பட்டு  வருகிறது. இந்தக்கல்லூரியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர் கல்லூரி விடுதியில் தங்கியுள்ளனர். இந்த விடுதியில் நேற்று இரவு மாணவிகளுக்கு பூரி மற்றும் குருமா வழங்கப்பட்டது. 

கல்லூரி மாணவிகள்

நேற்று இரவு சாப்பிட்ட பின் அமைதியாக தூங்கச் சென்ற மாணவிகளில் 15 பேருக்கு இன்று அதிகாலை திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து 15 பேரும்  பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உணவு சரியில்லாததால் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும், விடுதியைச் சுற்றி தண்ணீர் தேங்கி சுகாதாரமற்ற நிலை உள்ளதால் விஷ ஜந்துக்கள் வருவதாகவும் மாணவிகள் குற்றம்சாட்டினர்.

சுகாதாரமற்ற விடுதி

இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது. இதில்  50க்கும் மேற்பட்ட மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகம் அலுவலகம் அருகே கூடியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பேராசிரியர்கள் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.  அப்போது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேராசிரியர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து  மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web