இந்த மாசத்துல 15 நாட்கள் வங்கி விடுமுறை! வங்கிப் பணிகளை திட்டமிட்டுக்கோங்க!

 
bank holiday

இன்று புத்தாண்டு உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில காலண்டர் முறையில், புத்தாண்டு தினமாக இருந்தாலும், வருடா வருடம் இந்தியாவில் ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இந்நிலையில், இன்றைய விடுமுறையையும் சேர்த்து, இந்த மாதம் வங்கிகளுக்கு 15 தினங்கள் விடுமுறை தினங்களாக உள்ளன.  உங்கள் மாநிலத்திற்கேற்ப, விடுமுறை நாட்களை சரிப்பார்த்து, உங்க வங்கி பணிகளை திட்டமிட்டுக்கோங்க. இந்தியா முழுவதும்  இயங்கி வரும் அரசு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்படும் நாட்கள், விடுமுறை தினங்களை  ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளன. இந்நிலையில் ஜனவரி 2023ம் ஆண்டுக்கான வங்கிகள் விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் வங்கிப் பணிகளை திட்டமிட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கி
ரிசர்வ் வங்கியின் நாட்காட்டியின்படி, ஜனவரியில்  2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளுடன்   ஞாயிற்றுக் கிழமைகள், மற்ற விடுமுறை நாட்கள்  என மொத்தம் 14 வங்கி விடுமுறை நாட்கள் உள்ளன.இந்த விடுமுறை நாட்களில்  புத்தாண்டு, குரு கோவிந்த் சிங் ஜெயந்தி, மிஷனரி தினம், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி, மகர சங்கராந்தி, பொங்கல், குடியரசு தினம்  போன்ற நாட்கள் இந்திய அளவில் கொண்டாடப்பட உள்ள பண்டிகைகள் . இதுதவிர மாநில அளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு அந்தந்த மாநில அளவில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். இதனால் மாநிலத்திற்கு மாநிலம் விடுமுறை தினங்கள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

விடுமுறை

2023 ஜனவரி மாத விடுமுறை  நாட்கள் பட்டியல்: 

ஜனவரி 1  ஞாயிற்றுக்கிழமை: புத்தாண்டு தினம் 

ஜனவரி 2, 2023 - திங்கட்கிழமை - மிசோரம் மாநிலத்தில் விடுமுறை

ஜனவரி 3, 2023 - செவ்வாய்க்கிழமை - மணிப்பூர் மாநிலத்திற்கு விடுமுறை

ஜனவரி 5 வியாழக்கிழமை : குரு கோவிந்த் சிங் ஜெயந்தி

ஜனவரி 11 புதன் கிழமை : மிஷனரி தினம் (மிசோரம் )

ஜனவரி 12  வியாழக்கிழமை: சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி

ஜனவரி 14 சனிக்கிழமை : மகரச் சங்கராந்தி 

ஜனவரி 15 ஞாயிற்றுக்கிழமை : பொங்கல்/மாக் பிஹு 

ஜனவரி 16, 2023 - திங்கட்கிழமை - திருவள்ளுவர் தினம்

ஜனவரி 17, 2023 - செவ்வாய்க்கிழமை - உழவர் திருநாள்

ஜனவரி 22 ஞாயிற்றுக்கிழமை : சோனம் லோசர் (சிக்கிம் ) 

ஜனவரி 23 திங்கட்கிழமை  : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி

ஜனவரி 25 புதன் கிழமை : மாநில தினம் (ஹிமாச்சல பிரதேசம்)

ஜனவரி 26 வியாழக்கிழமை : குடியரசு தினம் 

ஜனவரி 31 செவ்வாய்க்கிழமை  : மீ-டேம்-மீ-ஃபை (அஸ்ஸாம் )

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web