நள்ளிரவில் அதிர்ச்சி... பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி!
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நள்ளிரவு நேரத்தில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். 34 பேருடன் சுங்கச் சாலையில் சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தடுப்புச்சுவரில் மோதிக் கவிழ்ந்தது. இந்த கோர விபத்து பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் 18 பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து யோக்யகர்த்தாவுக்கு பேருந்து சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். சமீபத்தில் ஜகார்த்தாவில் அலுவலகக் கட்டட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு வாரங்களுக்குள் மேலும் 15 பேர் பலியானது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
