பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி பல்கலைக்கழக வீரர்கள் 15 பேர் உடல் நசுங்கி பலி... !
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று அதிகாலை நேரிட்ட கோர விபத்து அந்த நாட்டையே உலுக்கியுள்ளது. லாகூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடா பகீர் டி குல்லி பகுதியில் அதிவேகமாக வந்த பஸ்சும் பயணிகள் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வாகனங்களின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் போட்டி ஒன்றில் பங்கேற்பதற்காக பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே மின்னல் வேகத்தில் வந்த பயணிகள் வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது பயங்கரமாக மோதியது. பலியானவர்களில் பெரும்பாலானோர் இளம் மாணவர்கள் என்பது சோகத்தை அதிகப்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கோர விபத்தில் காயமடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதிவேகமே இந்த உயிர்ப்பலிக்கு முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இளம் வீரர்களின் இந்த அகால மரணம் பல்கலைக்கழக வட்டாரத்திலும் அவர்கள் குடும்பத்திலும் பெரும் ஆறாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
