தேவாலயங்களில் வழிபாடு செய்துக் கொண்டிருந்த 150 பேர் கடத்தல் - நைஜீரியாவில் அட்டூழியம்!

 
தேவாலயம் கடத்தல்

நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்களைக் கடத்திச் சென்று பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வழிபாட்டுத் தலங்களை இலக்காக வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் கடுனா மாகாணத்தில் உள்ள கஜுரு (Kajuru) பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளன. மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிள்களில் வந்த பெருமளவிலான ஆயுதக் கும்பல் தேவாலயங்களைச் சூழ்ந்துகொண்டது. அவர்கள் கண்மூடித்தனமாக வானத்தை நோக்கிச் சுட்டு மக்களை அச்சுறுத்தினர். அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 150 பேரை அந்தக் கும்பல் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது.

கடத்தப்பட்டவர்களை மீட்பதற்காக நைஜீரியப் ராணுவம் மற்றும் போலீசார் கடுனா மாகாணக் காடுகளில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், நைஜீரியாவில் செயல்படும் 'போகோ ஹராம்' அல்லது பணத்திற்காகக் கடத்தலில் ஈடுபடும் ஆயுதக் குழுக்களின் கைவரிசையாக இது இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!